Mobile Battery விற்பனை செய்யும் போது கவனிக்க வேண்டியது

Mobile Battery விற்பனை செய்யும் போது கவனிக்க வேண்டியது

உண்மையிலேயே அந்த நபரின் மொபைல் பேட்டரி தான் ரிப்பேர் என்பதை தெரிந்து கொள்ள சில வழிமுறைகள் உள்ளது. 

  1. பேட்டரி உப்பி அளவில் பெரியதாக இருந்தால் உடனடியாக மாற்றவும். பேட்டரி உருவத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் நன்றாக இருப்பது போல் இருந்தால் அதன் செயல்பாட்டை கவனிக்கவும் உதாரணமாக சார்ஜ் ஒன்றிலிருந்து நூறு வரை உடனடியாக ஏறி விடுகிறது அதேபோல் 10 நிமிடம் ஒரு மணி நேரத்தில் 100 90 80 அப்படி படிப்படியாக இறங்கி ஒரு மணி நேரத்தில் குறைந்து விடுகிறது என்றால் புது பேட்டரியை மாற்றி இரண்டு நாட்கள் பரிசோதனை செய்துவிட்டு பழையபேட்டை தூக்கி போடவும்.
  2. மொபைலை சார்ஜ் செய்யும் பொழுது சார்ஜ் ஏறுவது போல் காண்பிக்கும் ஆனால் உண்மையில் சார்ஜ் ஏறாது இப்படி இருக்கும் பொழுது மொபைலை பயன்படுத்துபவர்கள் பேட்டரி ரிப்பேர் என்று புரிந்து கொள்வார்கள்.
  3. மொபைலை சார்ஜ் செய்யும் சார்ஜர் அல்லது டேட்டா கேபிள் ரிப்பேர் ஆக இருந்தாலும் சார்ஜ் ஏறுவது போல் காண்பிக்கும் ஆனால் சார்ஜ் ஏறாது. 
  4. மொபைல் தண்ணீரில் பட்டு மெயின் போர்டில் ஏதாவது சார்ஜிங் சம்மந்தமாக ரிப்பேர் ஏற்படுத்தியிரந்தாலும் சார்ஜ் ஏறாது எனவே நன்றாக உள்ள ஒரு பேட்டரியை மாற்றும்பொழுது இரண்டு நாட்கள் பரிசோதனை செய்துவிட்டு அந்த பேட்டரியை தூக்கி எறியவும்.